முதுகு வலியை தீர்க்கும் ஆஞ்சநேய ஆசனம்

செய்முறை :

விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் முட்டி போட்டு வலது கால் பாதத்தை தரையில் ஊன்றி கைகளை மார்புக்கு நேராக கும்பிட்ட நிலைக்கு வரவும். பின்னர் கைகளை கும்பிட்ட நிலையில் தலைக்கு மேல் தூக்கியபடி முன்பக்கமாக உடலை கொண்டு சென்று உடலை பின்புறமாக நன்றாக வளைக்கவும்.

இந்த நிலையில் வலது கால் பாதத்தை தரையில் ஊன்றிய படியும், இடது காலை பின்புறமாக தரையோடு தரையாக இருக்கும்படியும் (படத்தில் உள்ளபடி) வைக்கவும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முறை செய்ய வேண்டும். 

பயன்கள் :

இந்த ஆசனம் கால்களுக்கு நல்ல வலிமை தருகிறது. கால் முட்டி, பாத வலியை நீக்குகிறது. முதுகு தண்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் நிவாரணம் தருகிறது. வயிறு தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்