இந்தியாவில் 32 முக்கிய விடுதலை புலிகள் இருக்கிறார்கள் : இலங்கை அரசு தகவல் !
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த மிக முக்கியமான 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 16 அமைப்புகளை இலங்கை அரசு தடைசெய்துள்ளது. அதுமட்டுமல்லாது 400 க்கும் அதிகமான தமிழர்களை பட்டியலிட்டு , அவர்கள் இலங்கை வர தடை விதித்துள்ளது. இன் நிலையில் இன்றைய தினம்(07) இலங்கை அரசு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் சுமார் புலிகளின் அதி முக்கிய உறுப்பினர்கள் என்று கருதப்படும் சுமார் 32 பேர் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பான செய்திகளை இலங்கை அரசு இந்திய கியூ பிரிவுக்கு வழங்கவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில், முல்லைத்தீவில் இருந்து இவர்கள் இந்தியாவுக்கு கடல் மார்கமாக தப்பிச்சென்றதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இக் கருத்து தொடர்பாக தமிழக அரசியல் தலைவர் ஒருவர் தனது கருத்தை தெரிவிக்கும்போது, ஆம் தமிழகத்தில் 32 அல்ல, சுமார் 3.2 கோடி புலிகள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இங்கே உள்ள ஒவ்வொரு தமிழனும் புலி தான் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...