கர்ப்பிணி காதலியை தெருவில் வைத்து எரித்த கொடூர காதலன்.....
சீனாவில் காதலன் ஒருவன் கர்ப்பமாக இருந்த தனது காதலியின் முதுகில் எரிவாயு சிலிண்டரை கட்டி விட்டு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ மவுலியன் (36), சு ஃபேன் (21) இவர்கள் இருவரும் காதலர்கள். இந்நிலையில் மவுலியன் திடீரென்று படுக்கையில் இருந்த தனது காதலியை இழுத்து வந்து காரில் ஏற்றிக் கொண்டு உய்சோ நகரின் தெருவிற்கு சென்றுள்ளார்.
பின்பு, காரில் உள்ள இரண்டு சிலிண்டரை வெடிக்கச் செய்ததில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் காதலியை விட காதலனுக்கே அதிகமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
விசாரணையில், இவர்கள் காதலர்களாக ஆவதற்கு முன்னரே பாலியல் உறவில் ஈடுபட்டதால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்தாலும், இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து வண்ணம் இருந்துள்ளது. இதன் உச்சகட்டமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும், லீ மவுலியன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான் என அவனது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.




You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...