ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? பரபரக்கும் பாலிவுட்!!
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் ஆகியிருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப்பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
குழந்தை பிறந்ததும் வெளியே தலை காட்டாமல் இருந்த ஐஸ்வர்யா ராய், ஒருசில விளம்பரப்படங்களில் மட்டும் நடித்துள்ளார். இந்நிலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அமெரிக்காவில் நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆரத்யாவுடன் முதல் முறையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2-வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. எனினும் கடந்த ஜூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2-வது குழந்தை பிறக்கும் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...