வேலையில்லா பட்டதாரி' எப்போது ரிலீஸ்?
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', '3', 'நையாண்டி' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார். எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
'வேலையில்லா பட்டதாரி' தனுஷ் நடிக்கும் 25வது படம். எனவே, இப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸரும், பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் எனத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
விரைவில் இப்பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் 'அனேகன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.