மேஜர் முகுந்த் வீட்டில் விஜய்!!
கடந்த மாதம் 24ந் தேதி இந்திய எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் மேஜர் முகுந்தன் வரதாராஜன். அவருக்கு 42 குண்டுகள் முழுங்க ராணுவ மரியதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முகுந்தின் மகள் அர்ஷியாவின் வெள்ளிந்திரியான குழந்தை மனதும், அப்பா இறந்தது தெரியாமல் அவர் வந்திருந்தவர்களை வரவேற்றதும், டாட்டா காட்டி வழியனுப்பி வைத்ததும் எல்லோரையும் நெகிழ வைத்தது. இதனை தொலைக்காட்சியில் பார்த்த நடிகர் விஜய்யும் நெகிழ்ந்து போனார். அந்தக் குழந்தையை சந்திக்க விரும்பினார்.
கத்தி படத்தின் முதல்கட்ட பணிகளை முடித்து திரும்பியிருக்கும் விஜய் வந்த உடன் நேராக முகுந்தின் வீட்டிற்கு சர்ப்பரைசாக சென்றார். அவரது மனைவி, தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு அர்ஷியாவை மடியில் தூக்கி வைத்து கொஞ்சினார். அப்பா இன்னும் உயிருடன் இருப்பதாக கருதும் அர்ஷியா தன் அப்பா எல்லையில் நாட்டை பாதுகாத்து கொண்டிருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் கொஞ்சும் ஆங்கிலத்தில் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனர். அர்ஷியாவுடன் நீண்ட நேரம் இருந்து விட்டு அவரை பிரிய மனம் இல்லாமல் கனத்த இதயத்துடன் திரும்பினார் விஜய்.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.