தெருச்சண்டையில் கொடூரமாக தூக்கிவீசப்பட்ட குழந்தை VIDEO
சீனாவில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது குழந்தையை பந்தைப் போன்று தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவில் உள்ள சின்ஜி குடியிருப்பில் செங் வாங் (38) என்ற நபர் தனது வீட்டின் மேல்மாடியில் வைத்திருந்த சோலார் ஹீட்டரின் மேல், பக்கத்துவீட்டு 9 வயது சிறுவன் ஒருவன் கல்லால் எறிந்து சேதப்படுத்திவிட்டான்.
இதனால் ஆத்திரமடைந்த செங்வாங், பக்கத்து வீட்டுக்கு சென்று அந்த சிறுவனை கண்டிக்குமாறு சண்டை போட்டுள்ளார். ஆனால் அந்த நபரோ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளார்.
மேலும் மது அருந்தி இருந்ததால், அங்குள்ளவர்கள் செங்வாங்கை மிரட்டியும், அவமானபடுத்தியும் விரட்டிவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்து மிக வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்த செங் வாங் , வெளியில் பக்கத்து வீட்டின் ஒருவயது குழந்தை லீ நின்று கொண்டிருந்தான்.
அந்த குழந்தையை பார்த்தவுடன் அவருடைய ஆத்திரம் குழந்தையின் மேல் திரும்பியதால், உடனே அந்த குழந்தையை தூக்கி சாலையில் பந்தை தூக்கி எறிவது போல் எறிந்துவிட்டு ஓடிவிட்டார். இந்த காட்சியை பார்த்த சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எலும்பு முறிவுகளுடன் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங் வாங் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிறுகுழந்தையை கொலை செய்யும் முயற்சி என்ற பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...