திருமணத்தில் அன்பளிப்பு, மலர்கொத்து வேண்டாம்: விஜய் - அமலாபால் அறிவிப்பு
இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ந் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்சயதார்த்தமும். வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று மாலை அதே ஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
"திருமண நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் எங்களுக்கு அன்பளிப்பு தரவேண்டாம்" என்று இருவரும் திருமண பத்திரிக்கையுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் வைத்திருக்கிறார்கள்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுண்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.