சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங் சரணாகதி: முன்னாள் உதவியாளர் பரபரப்பு தகவல்...
சோனியா காந்தியிடம் பிரதமர் மன்மோகன் சிங் சரணாகதி அடைந்து விட்டதாக முன்னாள் உதவியாளர் எழுதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
‘பிரதமர் மன்மோகன் சிங், இதுவரை சுதந்திர இந்தியா கண்ட பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர்’ என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இன்றளவும் விமர்சித்து வருகிறது. அதை உறுதிப்படுத்துகிற வகையில், மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜய பாரு எழுதிய புத்தகம் படம் பிடித்துக் காட்டுகிறது.
சஞ்ஜய பாரு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி ‘விபத்தாக வந்த பிரதம மந்திரி- மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 301 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம், பெங்குயின் பதிப்பகத்தின் தயாரிப்பு.
இந்தப் புத்தகத்தில் மன்மோகன் சிங்கை நன்கு உற்றுநோக்கி ஆராய்ந்து பல தகவல்களை புத்தக ஆசிரியர் சஞ்ஜய பாரு வெளியிட்டுள்ளார். மன்மோகன்சிங் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லைப் பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார், முக்கிய மத்திய மந்திரிகள் நியமனத்திலும், பிரதமர் அலுவலக நியமனத்திலும் சோனியா காந்திதான் முடிவுகளை எடுத்தார், மன்மோகன் சிங் சோனியா காந்தியிடமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் சரணாகதி அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்தப் புத்தகத்தில் சஞ்ஜய பாரு மேலும் கூறி இருப்பதாவது:-
‘இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அது குழப்பத்தை தந்தது. கட்சித்தலைவர்தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டியதாயிற்று. கட்சிக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது’ என்று மன்மோகன் சிங் என்னிடம் கூறினார்.
2009-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றி, தனது வெற்றி என்று மன்மோகன் சிங் கற்பனை செய்து கொண்டதுதான் அவர் செய்த முக்கிய தவறு. அவர் அந்த எண்ணத்தைக் கொண்டுவிட்டார். தனது செயல்பாடுகளும், விதியும்தான் தன்னை மீண்டும் பிரதமர் ஆக்கியதே தவிர சோனியா காந்தி அல்ல என அவர் எண்ணினார்.
கொஞ்சம் கொஞ்சமாக, சில வார காலத்திலேயே அவர் விஷப்பல்லை பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார். தனது இஷ்டப்படி மந்திரிசபையில் மந்திரிகளை நியமிக்க முடியும் என அவர் கருதினார். ஆனால் பிரணாப் முகர்ஜியை (தன் விருப்பப்படி) நிதி மந்திரியாக்கி அந்த நம்பிக்கையை சோனியா காந்தி தகர்த்தார். இதில் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி ஆலோசிக்கக் கூட இல்லை.
தன்னோடு 1991-1993 காலக்கட்டத்தில் இணைந்து பணியாற்றிய சி.ரங்கராஜனைத்தான் நிதி மந்திரி ஆக்கும் எண்ணம் மன்மோகன் சிங்குக்கு இருந்தது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பகிரங்கமாவதற்கு முன்பு, ஆ.ராசாவை மந்திரி சபையில் சேர்க்காமல் விட்டுவிட வேண்டும் என்று அவர் முயற்சித்தார். ஆனால் 24 மணி நேரத்தில், அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து விட்டார்.
ஆ.ராசாவைத் தவிர்த்து டி.ஆர்.பாலுவையும் மந்திரிசபையில் சேர்ப்பதை மன்மோகன் சிங் எதிர்த்தார். அவர் விஷயத்தில் தான் நினைத்ததை மன்மோகன்சிங் செய்து காட்டினார். ஆனால் ஆ.ராசா விஷயத்தில் அது முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியை வெற்றிக்கு வழிநடத்திய போதும்கூட, 2004-ம் ஆண்டு பிரதமர் பொறுப்பை சோனியா காந்தி ஏற்காமல் அதிகாரத்தை துறப்பது போல காட்டிக்கொண்டது அரசியல் குறிக்கோளை அடைவதற்கான உத்திதான். அதிகாரம்தான் ஒப்படைக்கப்பட்டதே தவிர, அதை செலுத்துகிற உரிமை அல்ல.
காங்கிரஸ் எம்.பி.க்களும் எப்போதும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனதுக்கு உகந்தவர்களாகத்தான் நடக்க விரும்பினர். அரசியல் அவசியம் என்ற வகையில் கூட பிரதமருக்கு அவர்கள் விசுவாசமாக இருந்தது இல்லை. அந்த வகையில் சோனியா அல்லது அவரது கூட்டாளிகள் எதிர்பார்த்தபடி, மன்மோகன் சிங் இதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை.
பிரதமர் மன்மோகன்சிங் 2009 தேர்தல் வெற்றிக்கு பின்னர் என்னை பிரதமர் அலுவலகத்தில் தனது செயலாளர் ஆக்க விரும்பினார். ஆனால் இது கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாகக்கூறி, என்னை தனது அலுவலகத்தில் பணி அமர்த்த இயலவில்லை என கூறிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அமெரிக்காவுடனான சிவில் அணுசக்தி உடன்படிக்கையை இந்தியா செய்து கொண்டபோது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக பிரதமர் மன்மோகன்சிங் மிரட்டியதுடன், பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டதாகவும் சஞ்ஜய பாரு தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...
Powered by Blogger.