பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடி விமானங்கள் குண்டு வீச்சு: 20 தீவிரவாதிகள் சாவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகளில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பழங்குடியின பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள திராஹ் வால்லி மற்றும் மலைப்பகுதிகளில் மறைவான இடங்களில் முகாம்கள் அமைத்து தலிபான்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேரை, தலிபான்கள் கடத்தி சென்று அவர்களது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். இதையடுத்து கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம், போர் விமானங்கள் மூலம் அப்பகுதிகளில் அதிரடி தாக்குதல் நடத்தியதில், வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருந்த 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் தொடர்ந்து நடத்திய அதிரடி தாக்குதலில், போர் விமானங்கள் கைபர் பழங்குடியின பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை தாக்குதல் நடத்திய பகுதிகளை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர். போர் விமானங்கள் தாக்குதலில் அப்பகுதியில் இருந்த வெடிகுண்டு தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...