நியூசிலாந்தில் பரிதாப சம்பவம்; சிறுமியை 100 தடவை கடித்துக்குதறிய நாய்கள்

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியில் வடக்கு தீவில் அமைந்துள்ள முரூபரா நகருக்கு நண்பர்களை பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சென்றனர்.
தங்களுடன் ஒரே மகள் சகுராகோ உகாரா(7) என்பவளை அழைத்துச் சென்றார்கள். ஆனால் விருந்திற்கு சென்ற வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட 4 நாய்கள் ஆவேசம் கொண்டு சிறுமியை கடித்துக் குதறின. அதில் சிறுமியின் உடல் முழுக்க 100 காயங்கள் ஏற்பட்டன.
மிகவும் ஆபத்தான நிலையில் அவளை ஆக்லாந்து நகரிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்கள். சிறுமி இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று கூறும் டாக்டர்கள் தொடர்ந்து பல மாதத்திற்கு ஆபரேஷன் போன்ற சிகிச்சை பெற வேண்டும் என கூறி விட்டார்கள். சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தேவைப்படும் என கருதப்படுகிறது. அதற்கு நிதி உதவி அளிக்க தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்