1000 அடி கடல் ஆழத்தில் மலேசிய விமானம் : கண்டுபிடிப்பதே கடினம் !

கடந்த 8ம் திகதி காணாமல்போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கும் அனைத்து முயற்சிகளும் இன்றோடு கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்த விமானம் வீழ்ந்துள்ளது என்று பிரெஞ்சு சட்டலைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உண்மையில் பிரெஞ்சு சட்டலைட் நிறுவனம் குறித்த இந்த விமானத்தை கண்டு பிடிக்கவே இல்லை என்பது தான் உண்மையாகும். ஆனால் எதனை வைத்து இந்த முடிவை எட்டினார்கள் ? என்று நீங்கள் நினைப்பீர்கள். கடலுக்கு மேல் மிதந்த சில பொருட்களை வைத்தும், அவ்விடத்தில் காணப்பட்ட சில விமானக் கழிவுப் பொருட்களை வைத்துமே அவர்கள் ஒரு முடிவை எட்டியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. 

இதேவேளை குறித்த அந்த கடல் பகுதி பெரும் ஆழம் மிக்க இடமாகக் கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு அருகாமையில் உள்ள கடல் மிகவும் ஆழமானது. 1000 அடி தொடக்கம் 5000 அடி வரை கூட இக் கடல் ஆழமானது. எனவே இதில் இந்த விமானம் வீழ்ந்து இருந்தால், அது அடியில் சென்று கடல் படுக்கையில் தரைதட்டியிருக்கும். அந்த இடத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல் செல்வதே கடினம் ஆகும். இப்படியான நிலையில் ஸ்கேனர் கொண்டு இக் கடல் பகுதியின் அடியில் என்ன இருக்கிறது என்று ஆராயவே முடியாது. இன்னும் அவ்வளவு பாரிய தொழில் நுட்ப வளர்சியை மனித இனம் இன்னும் காணவில்லை. குறித்த இந்த விமானத்தில் பயணித்த அனைவரது உறவினர்களின் தொலைபேசிக்கும், மலேசிய விமான நிறுவனம் இன்று மாலை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது(எஸ்.எம்.எஸ்) .

அதில் உங்கள் உறவினர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று உறுதிசெய்துள்ளார்கள். இதுவரை காலமும் அமெரிக்கா, நியூசிலாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் இராணுவ விமானங்கள் தேடியது இடம் கடல் அல்ல. அவர்கள் கடலை இறுதியாகவே நோட்டம் இட்டார்கள். முதலில் அவர்கள் தரைப் பகுதியை தான் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். தரைப் பகுதியில் எதுவும் சிக்கவில்லை என்றவுடன் தான் கடல் பகுதிகளை நோட்டமிட்டார்கள். எனவே தரையில் எதுவும் இல்லாத பட்சத்தில், இந்த விமானம் கடலில் தான் வீழ்ந்திருக்கவேண்டும் என்று முடிவுசெய்துள்ளார்கள். இதனிடையே பல நாடுகளில் உள்ள, ஊடகங்கள் இதனைப் பரபரப்பு செய்தியாக மாற்றி பெரும் பணத்தை சம்பாதித்துள்ளார்கள். சில பல்கலைக் கழக மாணவர்கள் , தாம் கண்டுபிடித்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஒட்டுமொத்தத்தில் மலேசிய ஏர் லைன்ஸ் என்றால் உலகில் இனி தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று வந்துவிட்டது எனலாம்.

இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார் யார் ? இதோ லிஸ்ட் : இதனை வைத்துப் பார்த்தால் ஏதாவது துப்பு கிடைக்கலாம்...

விமானத்தில் பயணித்தவர்கள்
சீனர்கள் 153 
மலேசியர்கள் 38
இந்தோனேசியர்கள் 7
அவுஸ்திரேலியா 6
இந்தியர்கள் 5
பிரான்ஸ் 4 
அமெரிக்கா 3
நியுஸிலாந்து, உக்ரேன், கனடா, தலா 2
ரஷ்யா, தாய்வான், இத்தாலி, நெதர்லாந்து ,ஆஸ்திரியா தலா 1 
பணியாளர்கள் 12

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்