ஓய்வு பெற்ற பிறகு வசிக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2.5 ஏக்கரில் பங்களா

புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டெல்லியில் உள்ள மோதிலால் நேரு பேலஸ் வீட்டில் மன்மோகன் சிங் வசிக்க உள்ளார்.  இது பற்றி நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, அவர் மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்காக, டெல்லி மோதிலால் நேரு பேலசில் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. டெல்லி முதல்வராக இருந்தபோது ஷீலா தீட்சித் இந்த பங்களாவில்தான் வசித்து வந்தார். 

பதவி பறிபோனதை தொடர்ந்து இந்த வீட்டில் இருந்து மத்திய டெல்லி பெரோஷா சாலையில் உள்ள சில்வர் ஆர்ச் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறினார். மோதிலால் பேலசில் மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்களாவில் 4 அறைகள் உள்ளன. விருந்தினர்களை வரவேற்க தனி அறை, அலுவலக அறை போன்றவையும் இதில் உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். தற்போது, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் மன்மோகன் சிங் வசித்து வருகிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்