மலேசிய விமானம் மாயம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை

மலேசியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற பயணிகள் விமானம் சனிக்கிழமை அதிகாலை மாயமானது. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடியபோதும் 5 நாட்களாக அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தில் இருந்த 5 இந்திய பயணிகள் உள்ளிட்ட 239 பேரின் உறவினர்களும் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மலேசிய விமானம் மாயமானது கவலை அளிப்பதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மலேசிய அரசர் அப்துல் ஹலிம் முவாத்சாம் ஷா-வுக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், மலேசிய அரசு மற்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு இந்தியா சார்பிலும் தனது சார்பிலும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள பிரணாப், அதில் 5 இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மலேசிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள பிரணாப், இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்