மைக்கேல் ஜாக்சனின் ரகசிய மகன்! தகவல்கள் அம்பலமானது

பிரபல பாடகர் பிராண்டன் ஹோவரடு, மைக்கேல் ஜாக்சனின் உயிரியல் வாரிசு என டிஎன்ஏ சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இசைக் குடும்பமொன்றில் 1958 ஆகஸ்ட் 29 இல் 7 ஆவது குழந்தையாகப் பிறந்த மைக்கேல் ஜாக்சன் தனது 11 வயதிலேயே சகோதரர்களுடன் சேர்ந்து இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
உலக அளவில் பிரபலமாக விளங்கினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகமும் சோதனையும் நிறைந்ததாகவே காணப்பட்டது.
உலகப் பிரபலமாக வலம்வந்தாலும், ஜாக்சனை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜாக்சன் மீது கடந்த 1993ம் ஆண்டிலும், 2005ம் ஆண்டிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தனது உடலின் நிறத்தை மாற்றுவதற்கு அவர் செய்த சிகிச்சைகள் உடல் ரீதியில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தின.
அவரைத் தோல்புற்றுநோய் பீடித்திருப்பதாகவும் நுரையீரல்கள் செயலிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இவரது மணவாழ்க்கையும் திருப்திகரமானதாக அமையவில்லை. 1994ம் ஆண்டு எல்விஸ் பிரெஸ்லியின் மகளான லிசாமேரியை திருமணம் செய்து கொண்டவர், 2 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்தார்.
பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்துகொண்டபோது சந்தித்த தாதியான டெப்பி றோவை 1997ல் திருமணம் செய்த அவர் இருவருடங்களுக்குப் பிறகு மீண்டும் விவாகரத்துச் செய்தார், ஜாக்சனுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர்.
இது தவிர அவ்வப்போது மைக்கேல் ஜாசனின் வாரிசு என ஆங்காங்கே சில குரல்கள் கேட்பது உண்டு.
இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல பாடகர் பிராண்ட் ஹோவர்ட் மைகேல் ஜாக்சனின் உயிரியல் தந்தை என டிஎன்ஏ சோதன்னை மூலம் 99.9 சதவீதம் நிரூபணமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்