நான் தெரிவுசெய்யும் உடை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்: மக்கள் கூட்டத்தில் நடுவே ஒபாமா

அமெரிக்காவில் இந்த ஆண்டு மத்தியில் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நிதி திரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க் நகருக்கு சென்றார்.
கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அங்குள்ள ஒரு கடைக்கு சென்று அவர் தனது மகள்கள் சஷா, மலியா, மனைவி மிச்செல்லிக்கு உடைகளை தேர்வு செய்து வாங்கினார்.
மகள்களுக்கு மேலாடை வாங்குகிறபோது, வி வடிவ கழுத்து அமைப்பு கொண்ட உடை வாங்கினால் அது நழுவும் என கவலைப்பட்டார். அதற்காக வழக்கமான வடிவத்திலான கழுத்து அமைப்பு கொண்ட உடைகள் வாங்கினார்.
இதேபோன்று மனைவிக்கு தான் உடைகள் தேர்வு செய்து வாங்குவது கடினம் என்று கூறிய ஒபாமா, இருப்பினும் அவருக்கு காலுறைகள் மட்டுமே வாங்கியுள்ளார்.
அவர் மனைவி, மகள்களுக்காக உடைகள் வாங்கியதை பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், உளவுபடையினர் வேடிக்கை பார்த்தனர். அப்போது ஒபாமா, எனது உடை தேர்வு பெண்களுக்கு பிடிக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.




Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்