6 மாத கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட அமைச்சர்

ரஷியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த எம்.பி ஒருவர் தனது ஆதரவாளர்களை விட்டு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 ரஷ்யா லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான விளாடிமிர் ஜிரோனோஸ்கி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த செய்தியாளார் சந்திப்பில் 6 மாதம் கர்ப்பிணியான ரஷியா டுடே பத்திரிக்கையின் பெண் செய்தியாளர் ஸ்டெல்லா என்பவரும் கலந்து கொண்டார். அப்போது, ‘ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ரஷியாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் பகுதியான கிழக்கு உக்ரேனுக்கு தடை விதிக்கப்படுமா?’ என ஜிரோனோச்கியை நோக்கி கேள்வி எழுப்பினார் பெண் பத்திரிக்கையாளர். இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. ஜிரோனோஸ்கி தனது ஆதரவாளார்களை ஓடி சென்று பெண் செய்தியாளரை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.
தலைவர் பேச்சைத் தட்டாத அவரது உதவியாளர்களும் ஸ்டெல்லாவை கீழே தள்ளியுள்ளனர். இதனை பார்த்தும் மற்ற செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒருவழியாக எம்.பியின் ஆட்களிடமிருந்து ஸ்டெல்லா காப்பாற்றப் பட்டார். ஆயினும், இச்சம்பவத்தால் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப் பட்ட ஸ்டெல்லா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக எம்.பி.க்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக ரஷ்யா டுடே செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்.பியின் இந்த அநாகரீகமான செயலுக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்