மகன் உயிரை காக்க நசுங்கி செத்த அப்பா ! இளகிய உள்ளம் கொண்டவர்கள் வாசிக்க வேண்டாம் !
மகன் உயிரை காக்க நசுங்கி செத்த அப்பா ! இளகிய உள்ளம் கொண்டவர்கள் வாசிக்க வேண்டாம் !
சீனாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரது மனதையும் உருக்கியுள்ளது. சீனாவில் தனது 71 வயதாகும் அப்பாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மகன் ஒருவர் சென்றுள்ளார். மகனது பெயர் "யங்" ஆகும். இவருக்கு 45 வயது ஆகிறது. சிக்னல் ஒன்றில் இவர்கள் இருவரும் காத்து நின்றவேளை அந்த வழியாக வந்த பாரிய வண்டி ஒன்று அப்படியே அவர்கள் மீது ஒரு பக்கமாக மோதியுள்ளது. இதனால் இவ்விருவரும் நிலத்தில் வீழ்ந்துள்ளார்கள். சில நொடிப்பொழுதில் எல்லாம், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அந்த வண்டியின் டயருக்கு அடியில் மாட்டிக்கொண்டது. கூடவே 71 வயதான அப்பாவின் கால்களும் மாட்டிக்கொண்டது. இன் நிலையில் அந்த வலியையும் பொருட்படுத்தாது அந்த அப்பா, 45 வயதான தனது மகனை அந்த வண்டியின் டயருக்குள் சிக்கிவிடாமல் பலமாக தள்ளியுள்ளார்.
இதனால் மகன் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். இடுப்பில் ஏறிய சக்கரங்கள் சில நொடிகளில் எல்லாம், அந்த 71 வயதான அப்பாவின் நெஞ்சில் ஏறியது. அவ்விடத்திலேயே துடி துடித்து அவர் இறந்துபோனார். கால்களில் வண்டியின் டயர் ஏறும்போது எவ்வளவு தூரம் வலித்திருக்கும் ? ஆனால் அதனையும் பொருட்படுத்தாது, அவர் தனது மகன் உயிரை காப்பாற்றவேண்டும் என்று தான் அந்த வேளையிலும் நினைத்திருக்கிறார். கண்மூடி திறக்கு முன்னரே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. தனது அப்பா தன் உடலை தூரமாக தள்ளிவிட்ட நினைவுகள் மட்டுமே மகனிடம் மீதமாக உள்ளது. இருப்பினும் லாரியை செலுத்திய கொலைகாரன் , அப்படியே வண்டியை நிறுத்தாது தப்பிச் சென்றுவிட்டான். சம்பவ இடத்திற்கு விரைந்த சீனப் பொலிசார் வீதியில் உள்ள கமராக்களை வைத்து வண்டி எது என்று கண்டு பிடித்து அக் கொலைகாரணை தற்போது கைதுசெய்து விட்டார்கள்.
ஆனால் எவரால் அந்த அப்பாவை திருப்பி தரமுடியும் ? அந்த ஹீரோ அப்பவுக்கு உலக நாடுகளில் உள்ள பலர் சலீயூட் அடித்துள்ளார்கள். பிள்ளைப் பாசம் என்றால் என்ன என்பதனை இந்த அப்பா மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்திச் சென்றுள்ளார் என்று தான் கூறவேண்டும். இவரை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள இச்செய்தியை வாசித்த பலர், தாம் கண்ணீர் விட்டு வாசித்துள்ளோம் என்று பின்னூட்டத்தில்(காமென்சில்) தெரிவித்துள்ளார்கள்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...