பரபரப்பை ஏற்படுத்தி வரும் மிஸ்டர் பீனின் புதிய காதல்..




மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் ( 59 ) தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது .
பிரிட்டனைச் சேர்ந்த இவர் மிஸ்டர் பீன் நகைச்சுவைத் தொடர்களில் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தனது வேடிக்கையான செயல்களினால் சிரியவர் முதல் பெரியவர் அனைவரையும் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர் ஆவார் .
மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் கோமாளி போல் தோன்றினாலும் நிஜத்தில் மிக வித்தியாசமானவர் ரோவன் அட்கின்ஸன் .
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் முதுமானி பட்டம் பெற்ற இவர் , அங்கு படித்துக்கொண்டிருந்த காலத்தில் தான் " மிஸ்டர் பீன் " பாத்திரத்தை உருவாக்கினார் .
1990 ம் ஆண்டு சுனேத்ரா சாஸ்திரி எனும் இந்துப் பெண்ணை அட்கின்ஸன் திருமணம் செய்தார் . 1980 களில் பிபிசியில் மேக் அப் கலைஞராக சுனேத்ரா பணியாற்றிய போது அவரும் அட்கின்ஸனும் முதல் தடவையாக சந்தித்தனர் .
இவர்களின் திருமணம் நடைபெற்ற 1990 ம் ஆண்டில் தான் மிஸ்டர் பீன் நகைச்சுவை நாடகங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சக்கை போடு போடத் தொடங்கின .
இத்தம்பதிக்கு லிலி ( 20 ) எனும் மகளும் பெஞ்சமின் ( 19 ) எனும் மகனும் உள்ளனர் . இதில் லிலி என்பவர் ஒரு நடிகையாவார் .
23 வருடங்களாக இணைந்து வாழ்ந்த ரோவன் அட்கின்ஸனும் அவரின் மனைவி சுனேத்ராவும் பிரிந்துவிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன .
இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் ரோவன் அட்கின்ஸன் வெளியிடவில்லை . ஆனால் , அண்மையில் லூஸி போர்ட் எனும் நடிகையொருவருடன் நடிகர் அட்கின்ஸன் காணப்பட்டார் . இவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
31 வயதான லூயிஸ் போர்ட் நகைச்சுவை நடிகையாவார் . கடந்த வருடம் நாடகமொன்றில் நடித்தபோது அவரும் ரோவன் அட்கின்ஸனும் முதல் தடவையாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது .
நடிகை லூஸி போர்ட்டைவிட நடிகர் ரோவன் அட்கின்ஸன் சுமார் இரு மடங்கு அதிக வயதானவர் . ஆனாலும் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது .
ஆனால் , சுனேத்ராவுடனான திருமணத்தின்போது அணிந்த தனது திருமண மோதிரத்தை நடிகர் அட்கின்ஸன் இன்னும் கழற்றவில்லை . தனது திருமண வாழ்க்கை குறித்த கவனம் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் மேற்படி மோதிரத்தை கழற்றாமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது .
பிரிட்டனின் மிக செல்வந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழும் ரோவன் அட்கின்ஸனின் சொத்து மதிப்பு 7 கோடி ஸ்ரேலிங் பவுண்கள் ( சுமார் 1525 கோடி இலங்கை ரூபாய் ) என மதிப்பிடப்பட்டுள்ளது .
மிஸ்டர் பீன் நாடகங்களில் பிரிட்டிஷ் லேலண்ட் மினி ரக காரொன்றுடன் அவர் தோன்றும் காட்சிகளும் மிக பிரசித்தமானவை . ஆனால் , நிஜவாழ்வில் கார் பிரியரான ரோவன் அட்கின்ஸன் , அதி நவீன ஆடம்பர கார்கள் பலவற்றை வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்