அழகுக்கு அழகு சேர்ப்பது எப்படி?
‘அழகு, இயற்கையைப் போல இயல்பானது. அது எந்த அழகு சாதனத்திலும் ஒளிந்திருப்பதில்லை. குழந்தைகள் படிப்பது, வகுப்புக்குப் போவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். தொடர் டென்ஷன், சுற்றுச்சூழல் மாசு, தவறான உணவு முறை, ரசாயன கலப்புள்ள சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள், ஹார்மோன் மாற்றங்கள் குழந்தைகளின் அழகுக்கு எதிரான வில்லன்களாக செயல்படுகின்றன.
குழந்தைகளைப் பொறுத்த வரை, டீன் ஏஜ் பருவத்தை எட்டும் வரை அவர்களுக்கு எந்த அழகு சாதனமும் தேவையில்லை. விழா, விருந்துகளுக்குச் செல்லும் போது, அவசியம் என நினைத்தால், பிராண்டட் லிப்ஸ்டிக் அல்லது லிப் பாம் மற்றும் லிப் கிளாஸ் உபயோகிக்கலாம். மாய்ச்சரைசிங் உள்ளதாக இருக்க வேண்டும். மினுமினுப்பை தரக்கூடிய மெட்டல் பேஸ்டு லிப்ஸ்டிக் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. பூக்களைப் போன்ற அவர்களின் மென்மையான உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான் பியூட்டி பார்லருக்கு சென்றனர். இன்றையச் சூழலில் 12 வயதிலேயே பார்லர் செல்கிறார்கள். தவறான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, டென்ஷன் ஆகியவை சருமம் சார்ந்த பிரச்னைகளை உருவாக்குகின்றன. அவற்றை மாற்றாமல் க்ரீம்களை மட்டுமே நம்பி இந்தப் பிரச்னைகளை சரி செய்ய முடியாது. பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாய்ச்சரைசிங் க்ரீம், வைட்டமின்-இ உள்ள க்ரீம்களை 12 வயதுக்கு மேல் பயன்படுத்தலாம்.
பேந்த்தனால் மற்றும் தோலை வெண்மையாக்கும் என்ற உறுதிமொழியுடன் வரும் க்ரீம்களை தவிர்க்கலாம். ரசாயனக் கலப்புள்ள க்ரீம்களை இந்தப் பருவத்தில் உபயோகிப்பதால் சருமத்தின் இயல்புத்தன்மை பாதிக்கப்படும். நீண்ட காலம் பயன்படுத்தும் போது ஸ்கின் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஒரு காலத்தில் மெனோபாஸ் வேளையில் வரும் தோல் சுருக்கம், கருவளையம், முடி உதிர்தல் போன்ற அழகியல் சார்ந்த பிரச்னைகள் இப்போது 15 வயதிலேயே தொடங்கி விடுகின்றன. அழகு, 60 சதவிகிதம் சத்தான உணவையும் 40 சதவிகிதம் உடற்பயிற்சியையும் சார்ந்திருக்கிறது. நம் தோற்றம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான பழக்கங்களை சிறுவயதில் இருந்தே தொடங்கி விட வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உடற்பயிற்சியையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவில் அதிக உப்பு, காரம், புளிப்பு, எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நவதானியங்களில் ஏதாவது ஒன்றை தினமும் சுண்டலாக சாப்பிடலாம். நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால், பளிச் தோற்றத்துக்காக அழகு சாதனங்களின் பின்னே ஓட வேண்டியதில்லை. தேவைப்படும் போது, தோலின் தன்மைக்கு ஏற்ற பிராண்டட் அழகுசாதனங்களைப் பயன்படுத்தலாம். வெயிலில் அல்ட்ரா வயலெட் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், வெளியில் செல்லும் போது ஏதாவது ஒரு சன்ஸ்கிரீன் லோஷன் உபயோகிக்கலாம்.
குளிர்காலத்தில் கொப்புளங்கள், அரிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வியர்வையை வெளியேற்றுவதற்கான உடற்பயிற்சிகள் அவசியம். சுடுதண்ணீர் சேர்த்து ஜூஸ் தயாரித்துக் குடிக்கலாம். சீரகத் தண்ணீர், வெந்தயத் தண்ணீர் பருகலாம். படிப்புக் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்தை சந்திக் கிறார்கள். எனவே, அவர்களை வாரத்துக்கு மூன்று முறை தலைக்குக் குளிக்க வைப்பது அவசியம். வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் அவசியம். இதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகள் விடுபடுகிறார்கள். அவர்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்னைகள் வராமலும் தடுக்கலாம். மன அழுத்தம் குறைக்கப்பட்டால்தான் சிறுவயதிலேயே உருவாகும் மாதவிடாய் போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.
‘டின் ஃபுட்’ மற்றும் ரசாயனக் கலப்புள்ள உணவு வகைகளைத் தவிர்த்தால், அழகை அதன் இயல்பு மாறாமல் பராமரிக்க முடியும். தோலுக்கு புத்துணர்ச்சி தரும் பழங்கள், கீரை வகைகள், காய்கறிகளோடு குழந்தைகளை நட்பு கொள்ள வைக்கலாம். அதன் மூலம் அழகையும் தக்க வைக்கலாம். வாழ்க்கை முறை எவ்வளவு மாறினாலும் மன அழுத்தத்துக்கு இடம் கொடுத்தால் மிகக் குறைந்த வயதிலேயே பியூட்டி பார்லரை நோக்கி ஓட வேண்டியிருக்கும்’’ - எச்சரிக்கிறார் ராதிகா!
செல்லங்களுக்கான சருமப் பாதுகாப்புக்கு ஆலோசனை தருகிறார் அழகியல் சிகிச்சை மருத்துவர் சண்முகப்பிரியா...
‘‘குழந்தைகளின் தோல் மிக மென்மையானது. இப்போது சுற்றுச்சூழல் மாசு அதிகம் இருப்பதால் முகத்தில் அழுக்குச் சேராதபடி அவ்வப்போது குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் அரிப்பு போன்ற பிரச்னைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் க்ரீம்களை பயன்படுத்தி தவிர்க்கலாம். இப்போது கொசுப் பிரச்னை அதிகம். முகம் மற்றும் உடலில் கொசு கடிப்பதால் கொப்புளம், அலர்ஜி ஏற்படலாம். கொசுக் கடிப்பதைத் தடுக்க மாய்ச்சரைசிங் க்ரீம் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தோலின் தன்மைக்கு ஏற்ற சோப்பும், காலத்துக்கு ஏற்ற க்ரீமும் போதும். அதிகக் குளிர் மற்றும் அதிக சூடானதைத் தவிர்த்து, மிதமான சூடுள்ள தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஒரே ஸ்பாஞ்சில் 50 குழந்தைகளுக்கு மேக்கப் போடுவார்கள்... அது தவறு. பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தனியாக மேக்கப் கிட், ஸ்பாஞ்ச் பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் முகத்தில் மேக்கப் வைத்திருக்கக் கூடாது.
வைட்டமின்-ஏ சத்துக் குறைபாடு ஏற்பட்டால் முழங்கை, முழங்கால், தொடைப் பகுதிகளில் குறுணை வடிவ கொப்புளங்கள் தோன்றும். வைட்டமின்-ஏ அடங்கிய உணவுகள் எடுத்துக் கொண்டால் இப்பிரச்னையில் இருந்து மீளலாம். முடிந்த வரை பருத்தி உடைகளைப் பயன்படுத்துவது நல்லது. 18 வயதுக்கு முன்னால் ஐ புரோ திரெட்டிங் செய்வது, கெமிக்கல் ஹேர் ரிமூவர் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது...’’

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...
Powered by Blogger.