சென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில் பொலிசார்

சென்னையில் வெளி மாநில இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் விபசாரம் செய்வதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கே.கே.நகர் 69-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபசாரம் நடைபெறுவதாக விபசார தடுப்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.
அப்போது வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், நாகலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுபிடித்ததுடன், அவர்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்களை விபசாரத்தில் ஈடுபத்திய நாகலாந்தை சேர்ந்த புரோக்கர் குரோம் மற்றும் ஆல்வின் எபினேசர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இவர்கள் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை, தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டுமே 98 விபசார புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 125 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்படும் பெண்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
பரிசோதனைக்கு பிறகு அந்த பெண்களை சம்பந்தபட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பல பெண்கள் மீண்டும் இதே தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், சமீபகாலமாக விபசாரத்திற்காக வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்