அட கடவுளே ! புலி உறுமுது போஸ்டர் உதயன் போஸ்டர் என்று தெரியாத நபர்கள் !


எதனை தான் செய்தியாக்குவது என்று தெரியாத நிலை தமிழ் ஊடகப்பரப்பில் இருக்கிறது. யாழில் மீண்டும் புலி உறுமல் என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்கள் என்றும், அதனை கிட்டச் செறு பார்க மக்கள் பயப்பிடுவதாகவும் பிரபல இணையங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலை என்ன என்று இதுவரை ஆவர்கள் ஆராய தவறிவிட்டார்கள். இதுதொடர்பாக நாம் அவர்களுக்கு அறிவித்து இருந்தோம். ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை இந்த பிழையான செய்தியை தூக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அதன் பின்னரே நாம் இதனை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. 
யாழில் மீண்டும் புலி உறுமுது என்ற போஸ்டர் இனந்தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். உண்மையில் சொல்லப்போனால் , இது ஒரு அனாமதேய சுவரொட்டி அல்ல.
மீண்டும் புலி உறுமல் என்னும் தலைப்பில், யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை ஒருசெய்தியை வெளியிட்டுள்ளது. அதனை அவர்கள் சில கடைகளில்(அதாவது அவர்கள் பேப்பர் விற்கும் கடைகளில்) தொங்கவிட்டுள்ளார்கள். இதனை உடனே சுவரொட்டி அடித்து யாரோ ஒட்டிவிட்டதாக இந்த இணையங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது பிழை என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பது பெரும் கவலைக்குரிய விடையமாக உள்ளது. 


இதோ அந்தப் போஸ்டர்... உதயனின் போஸ்டரும் இணைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்) 



Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்