கறப்பழிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தூக்கில் தொங்கவிடப்பட்ட காட்சி:...

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

மீடியாக்கள் இதை பெரிது படுத்தாவி்ட்டாலும் சமூக வலை தளங்கள் மூலம் இந்த செய்தி பரவியது. பின்னர் சம்பந்தட்ட அதிகாரிகள் தற்காலிக பண நீக்கம் செய்யப்பட்டனர். (ஆம் தற்காலிம் தான்)

கீழ் ஜாதி என்று சொல்லப்படும் பெண்கள் சீரழிக்கப்பட்டுவருது தற்போது அதிகரத்துவிட்டது. இதை சட்டம் பாதுகாக்கின்றது. மேலும் இதற்கு அரசும் துணை நிற்கின்றது.

ஏனெனில் இங்கே அரசும், சட்டமும், காவல்துறையும், பத்திரிகைகளும் ஆதிக்கசாதி மனிதர்களித்தில் தான் இருக்கி்றது.

அதனால்தான் டெல்லி பார்ப்பன பெண் பாலியல் வல்லுறவுக்கு எதிராக இந்தியா கொந்தளித்தது. டெல்லி ஸ்தம்பித்தது. இளைஞர் கூட்டம் சாலைக்கு இறங்கி மறியல் செய்தது. அரசு புதிய சட்டத்தை முன்வைத்தது. பத்திரிகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிடாமல் பெயரைக்கூட ‘புணை’ பெயரில் வைத்து செய்திகளை வெளிட்டது.

ஆனால் இரண்டு தலித் பெண்கள் பலாத்தாரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது வீடியோ காட்சியிலும் இருக்கிறது. ஆனால் முகம் தெரியாத ஒரு பெண்ணுக்காக பதறிய இந்தியா ஏன் தலித் பெண்கள் தூக்கில் தொங்கும் காட்சியை பார்த்தும் பதறவில்லை? டெல்லி ஏன் ஸ்தம்பிக்கவில்லை?

இந்த மனநிலை இந்திய சமூகத்திலும் சட்டத்திலும் காவல்துறையிலும் பத்திரிகைதுறையிலும் இருக்கும் போது ஆதிக்க சாதியினர் தலித் பெண்களை எப்படி விட்டு வைப்பார்கள் ?

கறப்பழிக்கப்பட்ட இரண்டு தலித் சிறுமிகள் தூக்கில் தொங்கவிடப்பட்ட காட்சி:...


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்