யுவதியிடம் முத்தம் கேட்டு 1500 ரூபாயை இழந்த இளைஞன்

வெள்ளவத்தையைச் சேர்ந்த யுவதியொருவரிடம் காதலர் தினத்தன்று முத்தம் கேட்ட இளைஞன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெப்ரவரி 14ம் திகதி குறித்த யுவதி தனது நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த இனந்தெரியாத இளைஞன், தனக்கு முத்தம் கொடுக்குமாறு யுவதியிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளார்.
இதனையடுத்து கலவரமடைந்த யுவதி, சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தெமட்டக்கொடையைச் சேர்ந்த அந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 1500 ரூபாயை தண்டமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்