பிரபாகரனின் ஆவியாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் செயற்படுகிறார்! - பொதுபல சேன



பிரபாகரனின் ஆவியாக வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் செயற்படுவதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடக்கில் இருந்து வேறு நாடுகளுக்கு விமான சேவைகளையும் கப்பல் சேவைகளையும் நடத்துவதற்கு அனுமதிக்கமுடியாது.

இது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அத்துடன் வடக்கு கிழக்கை தவிர ஏனைய இடங்களில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் தமிழர்களுக்கு இந்த விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.

போரின் பின்னர் வடக்கு மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர விக்னேஸ்வரன் முயலவேண்டுமே தவிர , அவர் விடுதலைப்புலிகளின் இலக்கை அடைவதற்கு பிரபாகரனின் ஆவியை போன்று செயற்படுவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் பிரிவினைவாதத்துக்கே வழிவகுக்கும் என்றும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்