அத்வானி சென்ற பாதையில் பைப்வெடிகுண்டு வைத்த வழக்கு! தலைமறைவான பறவை பாதுஷா கேரளாவில் வளைப்பு



நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் பறவை பாதுஷா. அல்உமாவின் பொறுப்பாளரான கிச்சான் புகாரியின் சகாவானவன் பறவை பாதுஷா. இவன் மீது மேலப்பாளையத்தில் அடிதடி, வெடிபொருள் மற்றும் ஆயுதம் தொடர்பான வழக்குகள் உள்ளன. 
பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு வரும் வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. அதில், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் போன்றவர்கள் தொடர்புடையவர்கள் என்று தமிழக காவல்துறை அறிவித்தது. இதற்கு பின்னணியாக செயல்பட்டவன் பறவை பாதுஷா. 
மேலப்பாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டதில் கட்டை சாகுல் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையவன் பறவை பாதுஷா. விசாரணையில் தெரிந்துகொண்ட தனிப்படை போலீசார், அவனை தேடி வந்தனர்.

சிபிசிஐடியின் தனிப்படையின் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது தலைமையிலான தனிப்படை பறவை பாதுஷாவை தேடி கேரளாவில் உள்ள கொல்லம் மற்றும் புனலூர் பகுதியில் முகாமிட்டது. அப்படியிருந்தும் இவர்கள் பிடியில் சிக்காமல் தப்பினான் பறவை பாதுஷா. 
இதனிடையே கொல்லம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஞ்சால் பகுதியில் பறவை பாதுஷா பதுங்கி இருப்பதை அறிந்த சிபிசிஐடி டீம் சனிக்கிழமை இரவு அவனை வளைத்து கைதுசெய்தது. 
இதையடுத்து நெல்லை கொண்டுவரப்பட்ட பறவை பாதுஷா, ஞாயிற்றுக்கிழமை நெல்லை 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்