சிம்புவின் புதிய கெட்டப்!

நடிகர், நடிகைகளைப் பற்றிய தகவல்களை கூகிளில் தேடுவதை விட அவர்களது டுவிட்டர், ஃபேஸ்புக் வலைதளங்களை கிளறினால் போதும், தேவையான தகவல்கள் தானே தெரியவரும் என்பது தான் தற்போதைய நிலைமை.  சிம்பு தனது டுவிட்டர் வலைதளத்தில் கௌதம் மேனன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதையும், இந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை என்பதையும், ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த விறுவிறுப்பான கதை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

 மேலும் கௌதம் மேனன் படத்திற்கான தனது கெட்டப்பை வெளியே தெரியாமல் மறைத்து வந்தார் சிம்பு. சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்துகொண்டபோது தான் கௌதம் மேனன் படத்திற்காக சிம்பு தாடி வளர்த்திருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. 

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்