காணமல் போன விமானத்தில் இருந்த பயணிகளின் மோபைல் போன்கள் "றிங்" செய்கிறது

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணமல் போன மலேசிய விமானம் தொடர்பாக, மேலும் மர்மமான செய்திகள் வெளியாகி உலகை உலுப்பி வருகிறது. MH 370 என்ற இந்த போயிங் 777 விமானம் பீஜிங் நோக்கிப் பறந்தவேளை திடீரென ராடர் திரையில் இருந்து மறைந்தது. இதுவரை இந்த விமானம் கடலில் வீழ்ந்ததா ? இல்லை தரையில் வீழ்ந்ததா என்று தெரியாமல் பல நாடுகள் திகைப்பில் உள்ளார்கள். தேடுதல் நடவடிக்கைகளில் எதுவும் இதுவரை சிக்காத நிலையில், அதில் பயணித்த சுமார் 19 பேரின் மோபைல் போன்கள் றிங் செய்கிறது என்று அவர்களது உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். அதாவது காணமல் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், தனது உறவுகளின் மோபைல் போனுக்கு அழைப்பை விடுத்துள்ளார்கள்.

அதில் 19 பேரது மோபைல் தொலைபேசி றிங் ஆகிறது என்கிறார்கள். இதனால் மேலும் பரபரப்பு தோன்றியுள்ளது. விமானம் தரையில் வீழ்ந்து நொருங்கி இருந்தால் நிச்சயம் தீ பிடித்து எரிந்திருக்கும், இல்லையென்ற ? இல்லையென்றால் கடலில் வீழ்ந்து இருந்தால் விமானத்தினுள் நீர் புகுந்து அது ஆழ் கடலுக்குள் சென்றிருக்கும். எப்படி பார்த்தாலும் நெட்-வேர்க் (சிக்னல்) கிடைக்காது. அப்படி என்றால் 19 பேரின் மோபைல் போன்கள் மட்டும் எப்படி வேலைசெய்யும் ? றீங் ஆகும் மோபைல் போன்கள் எங்கிருக்கிறது என்று கண்டறிய ஜி.பி.எஸ் கருவிகளைப் பாவித்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் பரபரப்பு இவ்வாறு இருக்க, நாம் மேலும் ஒரு விடையத்தை தெரிவிக்கவேண்டும். குறித்த இந்த 19 பயணிகளின் மோபைல் போன்கள் றிங் செய்கிறதே தவிர, அதனை எவரும் எடுத்து கதைக்கவில்லையே ? அது ஏன் என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா ? உலகில் பல விமானங்கள் காணாமல் போயுள்ளது. வெடித்து சிதறியுள்ளது. ஆனால் இந்த மலேசிய விமானம் கிளப்பியுள்ள பரபரப்பு போல கடந்த காலங்களில் எதுவும் கிளம்பவில்லை. இந்த விமானத்தை தீவிரவாதிகள் கடத்திவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் போயிங் 777 ரக ராட்சத விமானத்தை பாரிய ஓடுபாதை இல்லாமல் இறக்குவது மிகவும் கடினமான விடையங்களில் ஒன்றாகும். இதனால் இந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாமல், அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா, மலேசிய போன்ற நாடுகள்(மீட்ப்புப் பணியில்) முழி பிதுங்கி நிற்கிறார்கள்.



Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்