மலாக்கா ஜலசந்தியில் மலேசிய விமானம்? தேடும் பணி தீவிரம்
காணாமல் போன மலேசிய விமானம் கடைசியாக மலாக்கா ஜலசந்தி பகுதியில் காணப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
239 பயணிகளுடன் சீனாவிற்கு புறப்பட்ட இந்த விமானம் ஒரு மணி நேரத்திற்கு பின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டிலிருந்து விலகியதுடன் தனது வழித்தடத்திலிருந்தும் விலகி மேற்கு திசையில் உள்ள மலாக்கா ஜலசந்தி பகுதியில் பறந்ததாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மலேசிய அதிகாரிகள் கூறும்போது, கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய பின் ஒரு மணி நேரத்தில் விமானம் காணாமல் போனதாக தெரிவித்தனர். அப்போது மலேசிய கிழக்கு கடல் பகுதியில் உள்ள கோடா பாருவுக்கும் வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35000 அடி உயரத்தில் அது பறந்து கொண்டிருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கோடா பாரு பகுதியில் பறந்தபோது தனது பயணப் பாதையிலிருந்து அவ்விமானம் விலகியதுடன் மலாக்கா ஜலசந்தியை நோக்கி பறந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பிரதானமான பகுதியாக மலாக்கா ஜலசந்தி விளங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை காலை அதிகாலை 2.40 மணியளவில் மலாக்கா ஜலசந்தியின் வடக்கு பகுதியான புலாவ் பரேக் தீவுகளுக்கருகே 29500 அடி உயரத்தில் பறந்ததாக ராணுவ உயரதிகாரியான ரோட்சாலி டாட் தெரிவித்தார். தற்போது இது குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்து துறை விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மலாக்கா ஜலசந்தி பகுதியிலும் தேடுதல் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...