ரஜினியுடன் மு.க.அழகிரி சந்திப்பு! VIDEO

நடிகர் ரஜினியை சென்னையில உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். உடன் அவரது மகன் துரை தயாநிதியும் சென்றார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி,

ரஜினி எனது நலம் விரும்பிகளில் ஒருவர். எனது மன அமைதிக்காக நான் அவரை சந்தித்தேன். கோச்சடையான் படப்பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அதனை மிகவும் ரசித்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்களை ரஜினியிடம் கூறினேன். அவரை நலம் விசாரித்தேன். மற்றப்படி என்னுடைய பர்சனல் மேட்டர் குறித்து பேசினோம் என்றார்.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசினீர்களா என்ற கேள்விக்கு, அரசியல் குறித்து எப்போதுமே அவரிடம் நான் பேசியதில்லை என்றார்.

முன்னதாக வியாழக்கிழமை காலை பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார், அப்போது கடந்த 4 ஆண்டுகளாக அவரது அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்ததற்கு நன்றி தெரிவிக்க சந்தித்ததாக கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்