16 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட சிறுமி: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த, மூன்று வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது 16 மணி போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டது.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி காட்டுகொட்டாயைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் தன் வீட்டருகே குடிநீருக்காக 500 அடி ஆழ ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். மோட்டார் பொருத்தாமல், வெறும் குழாயை சாக்குப்பையால் மூடி வைத்திருந்த நிலையில் நேற்று காலை 8:15 மணிக்கு ராமச்சந்திரனின் மூன்று வயது குழந்தை சாக்கு பையில் கால் வைத்து உள்ளே தவறி விழுந்தது. தகவல் அறிந்த பின்னர் தீயணைப்பு குழுவினர் மற்றும் மீட்பு குழுவினர், குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றின் ஒரு பக்கவாட்டில் ஏழு மணல் அள்ளும் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற மதுரையை சேர்ந்த ஐ.ஆர்.சி.சி., தனியார் மீட்பு குழுவினர் கேமரா உதவியோடு குழந்தையின் அசைவுகளை கண்காணித்தது மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமலிருக்க, குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தினர்.16 மணி நேரம் போராடிய பின் மீட்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தது

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்