வயர்லெஸ் முறை மூலம் Samsung Galaxy S5 இனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்

கைப்பேசி பிரியர்களின் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 இனை அடிப்படையாகக் கொண்டு மற்றுமொரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இவ்வகை கைப்பேசிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கவர்களில் (Cover) வயர்லெஸ் முறை மூலம் குறித்த கைப்பேசியினை சார்ஜ் செய்வதற்கான Qi எனும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
கறுப்பு மற்றும் வெள்ளை வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கவர்கள் 69.99 டொலர்கள் பெறுமதியானவையாகக் காணப்படுகின்றன.
இதேவேளை 29.99 டொலர்கள் பெறுமதியான சாதாரண கவர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்