பழ ரசங்கள் மற்றும் மிருதுவாக்கிகளில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை: ஆய்வில் தகவல்

மக்களால் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழ ரசங்கள் மற்றும் உணவுகளை மிருதுவாக்க பயன்படும் சேர்வைகள் என்பவற்றில் அளவுக்கு அதிகமான சர்க்கரை அளவு காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்க்கரை அளவானது சராசரி மனிதனுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள சர்க்கரை அளவிலும் அதிகமாக காணப்படுவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சிலவற்றில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்ட அளவை போன்று நான்கு மடங்கு அதிகமாக சர்க்கரை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக 50 வரையான உற்பத்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்