ஆசிய பேட்மின்டன் சிந்துவுக்கு வெண்கலம்

கிம்சியான்: தென் கொரியாவில் நடக்கும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஷிக்சியான் வாங்குடன் (சீனா) நேற்று மோதிய சிந்து 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். கடும் போராட்டமாக அமைந்த இரண்டாவது செட்டை ஷிக்சியான் 22-20 என்ற கணக்கில் கைப்பற்ற 1-1 என சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் தடுமாற்றத்துடன் விளையாடிய சிந்து 21-15, 20-22, 12-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி, 18 நிமிடம் போராடி தோற்றார். எனினும், அரை இறுதி வரை முன்னேறியதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 2010ல் டெல்லியில் நடந்த ஆசிய போட்டியில், சாய்னா நெஹ்வால் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஷ்வினி பொன்னப்பா ஜோடி அரை இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. சீனாவின் லுவோ யிங் - லுவோ யு ஜோடி 21-12, 21-7 என்ற நேர் செட்களில் ஜுவாலா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்